Map Graph

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி

இலங்கையின் பாடசாலை

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி என்று இன்று பெயர் பெற்றுள்ள பாடசாலையே யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்ட முதலாவது பாடசாலையாகும். இக் கல்லூரி 1817 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. அப்போது இதன் பெயர் யாழ்ப்பாணம் வெஸ்லியன் ஆங்கிலப் பாடசாலை. பின்னர் 1825ஆம் ஆண்டில் தற்போது வேம்படி மகளிர் கல்லூரி இருக்கும் இடத்துக்கு மாற்றப்பட்டது. வெஸ்லியன் மிஷனைச் சேர்ந்த வண. பீட்டர் பேர்சிவல் பாதிரியாரால் 1834 ஆம் ஆண்டில் இதன் பெயர் யாழ்ப்பாணம் மத்திய பாடசாலை என மாற்றப்பட்டது. ஆண்கள் பாடசாலையான இது யாழ்ப்பாண நகரப் பகுதியில் அமைந்துள்ளது. இது ஒரு தேசிய பாடசாலை ஆகும். யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அதிபர்களின் பெயர்1816 ஜேம்ஸ் லிஞ் 1820 ரொபேர்ட் கோர்வர் 1825 ஜோசப் ரொபேர்ட் 1834 கலாநிதி.பீட்டர் பேசிவல் 1852 ஜோன் வோல்ட்டன்

Read article
படிமம்:Location_map_of_central_Jaffna.pngபடிமம்:Jaffna_Central_College.jpg